ஹதீஸ்கள்
#7250
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள்தான் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நீளமாக சஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்திப் பின்னர் “அல்லாஹு அக்பர்” என்று சொன்னார்கள். பின்னர் தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தா செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ايوب، عن محمد، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم انصرف من اثنتين فقال له ذو اليدين اقصرت الصلاة يا رسول الله، ام نسيت فقال " اصدق ذو اليدين ". فقال الناس نعم. فقام رسول الله صلى الله عليه وسلم فصلى ركعتين اخريين، ثم سلم، ثم كبر، ثم سجد مثل سجوده او اطول، ثم رفع، ثم كبر، فسجد مثل سجوده، ثم رفع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7250
- Book Index
- 5
Grades
- -
