ஹதீஸ்கள்
#7239
ஸஹீஹ் அல்-புகாரீ - Wishes
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை (எப்போதும் தொழும் நேரத்தைவிட)த் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “தொழுகைக்கு வாருங்கள், அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் உறங்கிவிட்டார்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் நீர் சொட்டிக்கொண்டிருக்க வெளியே வந்து, “‘என் சமுதாயத்தாருக்கு’ அல்லது ‘மக்களுக்கு’ச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷா) தொழுகையை இந்த (இருள் கப்பிய) நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன்” என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள்” என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிரா விட்டால், (இஷா தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)” என்று சொன்னார்கள்.17 அதாஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு ஒன்றும் உள்ளது. அதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இடம்பெறவில்லை. இந்த ஹதீஸ் சிற்சில வாசக மாற்றங்களுடன் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال عمرو حدثنا عطاء، قال اعتم النبي صلى الله عليه وسلم بالعشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله، رقد النساء والصبيان، فخرج وراسه يقطر يقول " لولا ان اشق على امتي او على الناس، وقال سفيان ايضا، على امتي لامرتهم بالصلاة هذه الساعة ". قال ابن جريج عن عطاء عن ابن عباس اخر النبي صلى الله عليه وسلم هذه الصلاة فجاء عمر فقال يا رسول الله رقد النساء والولدان. فخرج وهو يمسح الماء عن شقه يقول " انه للوقت، لولا ان اشق على امتي ". وقال عمرو حدثنا عطاء ليس فيه ابن عباس اما عمرو فقال راسه يقطر. وقال ابن جريج يمسح الماء عن شقه. وقال عمرو لولا ان اشق على امتي. وقال ابن جريج انه للوقت، لولا ان اشق على امتي. وقال ابراهيم بن المنذر حدثنا معن، حدثني محمد بن مسلم، عن عمرو، عن عطاء، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wishes
- Hadith Index
- #7239
- Book Index
- 14
Grades
- -
