ஹதீஸ்கள்
#7224
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டுவந்து சுள்ளிகளாக உடைக்கும் படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக் கும்) மனிதர்களைத் தேடிச்சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு.85 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் ‘இஷா’ தொழுகையில் கலந்துகொள்வார். முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘மிர்மாத்’ என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்ப்பாட்டில்) ‘மின்ஸாத்’ மற்றும் ‘மீளாத்’ போன்றதாகும். இதிலுள்ள ‘மீம்’ எனும் எழுத்துக்கு ‘இகர’ அடையாளம் (‘கஸர்’) உண்டு. அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " والذي نفسي بيده لقد هممت ان امر بحطب يحتطب، ثم امر بالصلاة فيوذن لها، ثم امر رجلا فيوم الناس، ثم اخالف الى رجال فاحرق عليهم بيوتهم، والذي نفسي بيده لو يعلم احدكم انه يجد عرقا سمينا او مرماتين حسنتين لشهد العشاء ". قال محمد بن يوسف قال يونس قال محمد بن سليمان قال ابو عبد الله مرماة ما بين ظلف الشاة من اللحم مثل منساة وميضاة. الميم مخفوضة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7224
- Book Index
- 83
Grades
- -
