ஹதீஸ்கள்
#7219
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பனூ சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து ‘பைஅத்’ செய்தபிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியுற்றேன். உமர் (ரலி) அவர்கள் ஓரிறை உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார் கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், உயர்ந்தோன் அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நல்வழி காட்டினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்கள். எனவே, அன்னாரிடம் (ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்துகொடுங்கள். நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாஇதா மண்டபத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டிருந் தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது. அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “அன்றைய தினம் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூபக்ர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை யில் ஏற, அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، اخبرني انس بن مالك رضى الله عنه انه سمع خطبة، عمر الاخرة حين جلس على المنبر، وذلك الغد من يوم توفي النبي صلى الله عليه وسلم فتشهد وابو بكر صامت لا يتكلم قال كنت ارجو ان يعيش رسول الله صلى الله عليه وسلم حتى يدبرنا يريد بذلك ان يكون اخرهم فان يك محمد صلى الله عليه وسلم قد مات، فان الله تعالى قد جعل بين اظهركم نورا تهتدون به بما هدى الله محمدا صلى الله عليه وسلم وان ابا بكر صاحب رسول الله صلى الله عليه وسلم ثاني اثنين، فانه اولى المسلمين باموركم، فقوموا فبايعوه. وكانت طايفة منهم قد بايعوه قبل ذلك في سقيفة بني ساعدة، وكانت بيعة العامة على المنبر. قال الزهري عن انس بن مالك سمعت عمر يقول لابي بكر يوميذ اصعد المنبر. فلم يزل به حتى صعد المنبر، فبايعه الناس عامة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7219
- Book Index
- 79
Grades
- -
