ஹதீஸ்கள்
#7215
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் (பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்; ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தனது கையைப் பின்வாங்கிக்கொண்டு, “இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவி செய்தாள். ஆகவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகின்றேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள். (ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதி மொழியளித்தவர்களில்) உம்மு சுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் துணைவியாரான ‘பின்த் அபீசப்ராவும்’ அல்லது ‘பின்த் அபீசப்ராவும் முஆத் (ரலி) அவர்களின் துணைவியாரும்’ தவிர வேறெவரும் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.79 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الوارث، عن ايوب، عن حفصة، عن ام عطية، قالت بايعنا النبي صلى الله عليه وسلم فقرا على {ان لا يشركن بالله شييا} ونهانا عن النياحة، فقبضت امراة منا يدها فقالت فلانة اسعدتني وانا اريد ان اجزيها، فلم يقل شييا، ثم رجعت، فما وفت امراة الا ام سليم وام العلاء، وابنة ابي سبرة امراة معاذ او ابنة ابي سبرة وامراة معاذ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7215
- Book Index
- 75
Grades
- -
