ஹதீஸ்கள்
#7203
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் நான் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், “நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறை நம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் பின் மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்” என்று எழுதித்தந்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن سفيان، حدثنا عبد الله بن دينار، قال شهدت ابن عمر حيث اجتمع الناس على عبد الملك قال كتب اني اقر بالسمع والطاعة لعبد الملك امير المومنين على سنة الله وسنة رسوله ما استطعت، وان بني قد اقروا بمثل ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7203
- Book Index
- 63
Grades
- -
