ஹதீஸ்கள்
#7201
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அகழ் வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காகக்) குளிர்ந்த காலைப் பொழுதில் வெளியே சென்றார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் அகழ் தோண்டிக்கொண்டிருந்தார்கள். (அதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், “இறைவா!மறுவை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடலில்) கூறினார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் நபித்தோழர்கள், “நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்” என்று கூறினர்.66 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا خالد بن الحارث، حدثنا حميد، عن انس رضى الله عنه خرج النبي صلى الله عليه وسلم في غداة باردة والمهاجرون والانصار يحفرون الخندق فقال " اللهم ان الخير خير الاخره فاغفر للانصار والمهاجره " فاجابوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7201
- Book Index
- 61
Grades
- -
