ஹதீஸ்கள்
#7154
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், “இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம் (தெரியும்)” என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், “என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்துசென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார். அப்பெண், “எனக்கு அவர் யாரென்று தெரியாது” எனக் கூறினாள். அம்மனிதர், “அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், “பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைகொள்வதேயாகும்” என்று சொன்னார்கள்.17 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا عبد الصمد، حدثنا شعبة، حدثنا ثابت البناني، عن انس بن مالك، يقول لامراة من اهله تعرفين فلانة قالت نعم. قال فان النبي صلى الله عليه وسلم مر بها وهى تبكي عند قبر فقال " اتقي الله واصبري ". فقالت اليك عني، فانك خلو من مصيبتي. قال فجاوزها ومضى فمر بها رجل فقال ما قال لك رسول الله صلى الله عليه وسلم. قالت ما عرفته قال انه لرسول الله صلى الله عليه وسلم قال فجاءت الى بابه فلم تجد عليه بوابا فقالت يا رسول الله والله ما عرفتك. فقال النبي صلى الله عليه وسلم " ان الصبر عند اول صدمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7154
- Book Index
- 18
Grades
- -
