ஹதீஸ்கள்
#7152
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
தரீஃப் அபீதமீமா பின் முஜாலித் அல்ஹுஜைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள், ஸஃப்வான் (பின் முஹ்ரிஸ் -ரஹ்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களுடைய தோழர்களும், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்க ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக் கத்தை) அல்லாஹ் மறுமை நாளில் விளம் பரப்படுத்துவான்.15 யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள் ளாக்குவான். அப்போது நண்பர்கள், “எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்க, ஜுன்தப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்தபிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனது வயிறுதான். ஆகவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும். (ஃபர்பரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் அபூஅப்தில்லாஹ் (புகாரீ-ரஹ்) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொல்பவர் யார்? ஜுன்தப் (ரலி) அவர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; ஜுன்தப் (ரலி) அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، حدثنا خالد، عن الجريري، عن طريف ابي تميمة، قال شهدت صفوان وجندبا واصحابه وهو يوصيهم فقالوا هل سمعت من رسول الله صلى الله عليه وسلم شييا قال سمعته يقول " من سمع سمع الله به يوم القيامة قال ومن يشاقق يشقق الله عليه يوم القيامة ". فقالوا اوصنا. فقال" ان اول ما ينتن من الانسان بطنه، فمن استطاع ان لا ياكل الا طيبا فليفعل، ومن استطاع ان لا يحال بينه وبين الجنة بملء كفه من دم اهراقه فليفعل ". قلت لابي عبد الله من يقول سمعت رسول الله صلى الله عليه وسلم جندب قال نعم جندب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7152
- Book Index
- 16
Grades
- -
