ஹதீஸ்கள்
#7139
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா (ரலி) அவர்களி டம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்: இறை வாழ்த்துக்குப்பின்: உங்களில் சிலபேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கவும்படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்கின்ற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குறைஷியரிடையேதான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக்கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம்குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டி வரும்வரை இந்நிலை நீடிக்கும்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.5 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال كان محمد بن جبير بن مطعم يحدث انه بلغ معاوية وهو عنده في وفد من قريش ان عبد الله بن عمرو يحدث انه سيكون ملك من قحطان فغضب، فقام فاثنى على الله بما هو اهله، ثم قال اما بعد فانه بلغني ان رجالا منكم يحدثون احاديث ليست في كتاب الله، ولا توثر عن رسول الله صلى الله عليه وسلم واوليك جهالكم، فاياكم والاماني التي تضل اهلها، فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان هذا الامر في قريش، لا يعاديهم احد الا كبه الله على وجهه ما اقاموا الدين ". تابعه نعيم عن ابن المبارك عن معمر عن الزهري عن محمد بن جبير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7139
- Book Index
- 3
Grades
- -
