ஹதீஸ்கள்
#7105
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி), அம்மார் (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களிடம்,) “(இப்போரில்) உங்கள் (அணியிலுள்ள) தோழர்களில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நான் நினைத்தால் குறைகூற முடியும்; உங்களைத் தவிர. நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிóருந்து (ஆயிஷா-ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், “அபூமஸ்ஊத் அவர்களே! நீங்களும் உங்களுடைய இந்தத் தோழரும் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிலிருந்து (ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்களிருவரும் காட்டும் தாமதத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள். வசதியானவராய் இருந்த அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அப்போது, “பணியாளரே! இரண்டு அங்கிகளைக் கொண்டுவா!” என்று உத்தரவிட்டு, (அவை கொண்டு வரப்பட்டவுடன்) அவ்விரண்டில் ஒன்றை அபூமூசா (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை அம்மார் (ரலி) அவர்களுக் கும் கொடுத்தார்கள். பிறகு, “இதை அணிந்துகொண்டு இருவரும் ஜுமுஆ தொழுகைக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن شقيق بن سلمة، كنت جالسا مع ابي مسعود وابي موسى وعمار فقال ابو مسعود ما من اصحابك احد الا لو شيت لقلت فيه غيرك، وما رايت منك شييا منذ صحبت النبي صلى الله عليه وسلم اعيب عندي من استسراعك في هذا الامر. قال عمار يا ابا مسعود وما رايت منك ولا من صاحبك هذا شييا منذ صحبتما النبي صلى الله عليه وسلم اعيب عندي من ابطايكما في هذا الامر. فقال ابو مسعود وكان موسرا يا غلام هات حلتين. فاعطى احداهما ابا موسى والاخرى عمارا وقال روحا فيه الى الجمعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7105
- Book Index
- 54
Grades
- -
