ஹதீஸ்கள்
#7103
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அப்போது அம்மாரைச் சந்திக்க அபூமூசா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அவர்களிருவரும் (அம்மாரிடம்), “(ஆயிஷாவை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் செய்தவற்றிலேயே எங்களுக்கு அறவே பிடிக்காத செயலாக நாங்கள் கருதுகின்றோம்” என்று சொன்னார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “(அலி (ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்காமல்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தாமதத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் இருவரும் செய்தவற்றிலேயே எனக்கு அறவே பிடிக்காத செயலாக நான் கருதுகிறேன்” என்று சொன்னார்கள். பின்னர் அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் மற்ற இருவருக்கும் ஆளுக்கொரு அங்கியை அணிவித்தார்கள். பிறகு அவர்கள் (அனைவரும்) பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا بدل بن المحبر، حدثنا شعبة، اخبرني عمرو، سمعت ابا وايل، يقول دخل ابو موسى وابو مسعود على عمار حيث بعثه علي الى اهل الكوفة يستنفرهم فقالا ما رايناك اتيت امرا اكره عندنا من اسراعك في هذا الامر منذ اسلمت. فقال عمار ما رايت منكما منذ اسلمتما امرا اكره عندي من ابطايكما عن هذا الامر. وكساهما حلة حلة، ثم راحوا الى المسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7103
- Book Index
- 53
Grades
- -
