ஹதீஸ்கள்
#7100
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூமர்யம் அப்துல்லாஹ் பின் ஸியாத் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஜமல் பேரின்போது) தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் (இராக்கிலுள்ள) ‘பஸ்ரா’வுக்குச் சென்றபோது அலீ (ரலி) அவர்கள், அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களையும் (மக்களைத் திரட்டுமாறு கூஃபாவுக்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்கள் இருவரும் எங்களிடம் கூஃபாவுக்கு வந்து சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) ஏறினர். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் அதன்மேல் தளத்தில் இருந்தார்கள். அம்மார் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்குக் கீழே நின்றிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் ஒன்றுதிரண்டோம். அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பஸ்ராவுக்குச் சென்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்கள் நபியின் துணைவியார் ஆவார்கள். (அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.) ஆனால், வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? அல்லது ஆயிஷாவுக்குக் கீழ்ப்படி கிறீர்களா? என்று (வெளிப்படையாக) அறிந்துகொள்வதற்காக உங்களைச் சோதிக்கின்றான்” என்று சொல்லக் கேட்டேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا يحيى بن ادم، حدثنا ابو بكر بن عياش، حدثنا ابو حصين، حدثنا ابو مريم عبد الله بن زياد الاسدي، قال لما سار طلحة والزبير وعايشة الى البصرة بعث علي عمار بن ياسر وحسن بن علي، فقدما علينا الكوفة فصعدا المنبر، فكان الحسن بن علي فوق المنبر في اعلاه، وقام عمار اسفل من الحسن، فاجتمعنا اليه فسمعت عمارا يقول ان عايشة قد سارت الى البصرة، ووالله انها لزوجة نبيكم صلى الله عليه وسلم في الدنيا والاخرة، ولكن الله تبارك وتعالى ابتلاكم، ليعلم اياه تطيعون ام هي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7100
- Book Index
- 51
Grades
- -
