ஹதீஸ்கள்
#7099
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஜமல்’ போர் சமயத்தில் (ஆயிஷா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு நான் போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற் றிருந்த) ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான். பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “தமது விவகாரத்தை ஒரு பெண்ணிடம் (முழுமையாக) ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் வெல்லாது” என்று சொன்னார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்.)37 அத்தியாயம் :
حدثنا عثمان بن الهيثم، حدثنا عوف، عن الحسن، عن ابي بكرة، قال لقد نفعني الله بكلمة ايام الجمل لما بلغ النبي صلى الله عليه وسلم ان فارسا ملكوا ابنة كسرى قال " لن يفلح قوم ولوا امرهم امراة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7099
- Book Index
- 50
Grades
- -
