ஹதீஸ்கள்
#7098
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் இவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம் இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு உசாமா (ரலி) அவர்கள், “நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால், கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமலேயே அவர்களிடம் (இரகசியமாகப்) பேசுகின்றேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறக்கும் முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒரு மனிதர் இரண்டு பேருக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதனால் அவரை ‘மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்’ என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு விஷயத்தை) நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லமாட்டேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தனது செக்கைச் சுற்றிவருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, “இன்னாரே (உமக்கேன் இந்த நிலை?) நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக்கொண்டிருக்(கும் நற்பணி செய்துகொண்டிருக்)கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர், “நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்.35 அத்தியாயம் :
حدثني بشر بن خالد، اخبرنا محمد بن جعفر، عن شعبة، عن سليمان، سمعت ابا وايل، قال قيل لاسامة الا تكلم هذا. قال قد كلمته ما دون ان افتح بابا، اكون اول من يفتحه، وما انا بالذي اقول لرجل بعد ان يكون اميرا على رجلين انت خير. بعد ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول " يجاء برجل فيطرح في النار، فيطحن فيها كطحن الحمار برحاه، فيطيف به اهل النار فيقولون اى فلان الست كنت تامر بالمعروف، وتنهى عن المنكر فيقول اني كنت امر بالمعروف ولا افعله، وانهى عن المنكر وافعله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7098
- Book Index
- 49
Grades
- -
