ஹதீஸ்கள்
#7095
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் அரசியல் குழப்பம் நடந்து கொண்டிருந்தபோது) எங்களிடம் (ஒருநாள்) வந்தார்கள். அன்னார் எங்க ளுக்கு ஒரு நல்ல ஹதீஸை எடுத்துரைக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்தோம். இதற்கிடையில் ஒருவர் அவர்களை நோக்கி விரைந்துசென்று, “அபூஅப்திர் ரஹ்மானே! குழப்பத்தின்போது போர் புரிவது பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வோ, “குழப்பம் நீங்கும்வரை போரிடுங்கள்” என்று (8:39ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “தாயற்றுப்போவாய்! (இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள) ‘குழப்பம்’ என்னவென்று உனக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன்தான் போரிட்டார்கள். இணைவைப்பாளர்களின் மார்க்கத்தில் இருப்பதுதான் குழப்பமே. ஆனால், (இன்று) ஆட்சியதிகாரத்திற்காக நீங்கள் போரிட்டுக்கொள்வதைப் போன்று அது இருக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.31 அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، حدثنا خالد، عن بيان، عن وبرة بن عبد الرحمن، عن سعيد بن جبير، قال خرج علينا عبد الله بن عمر فرجونا ان يحدثنا، حديثا حسنا قال فبادرنا اليه رجل فقال يا ابا عبد الرحمن حدثنا عن القتال في الفتنة والله يقول {وقاتلوهم حتى لا تكون فتنة} فقال هل تدري ما الفتنة ثكلتك امك، انما كان محمد صلى الله عليه وسلم يقاتل المشركين، وكان الدخول في دينهم فتنة، وليس كقتالكم على الملك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7095
- Book Index
- 46
Grades
- -
