ஹதீஸ்கள்
#7094
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று சொன்னார்கள். மக்கள், “(இராக் திசையில் அமைந்த) எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்கள்)” என்று கேட்க, (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் வளம் வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் வளம் வழங்குவாயாக!” என்றே பிரார்த்தித்தார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்களேன்)” என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், -மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன்- “அங்குதான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.30 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا ازهر بن سعد، عن ابن عون، عن نافع، عن ابن عمر، قال ذكر النبي صلى الله عليه وسلم " اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يمننا ". قالوا وفي نجدنا. قال " اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يمننا ". قالوا يا رسول الله وفي نجدنا فاظنه قال في الثالثة " هناك الزلازل والفتن، وبها يطلع قرن الشيطان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7094
- Book Index
- 45
Grades
- -
