ஹதீஸ்கள்
#7089
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் சொற்பொழிவு மேடையின் மீதேறி, “(இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை” என்று (கோபத்துடன்) கூறினார்கள். உடனே நான்வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டைசச்சரவு செய்யும்போது அவருடைய தந்தையல்லாத மற்றொரு வரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார். ஆகவே அவர், “அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தந்தை ஹுதாஃபா” என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம். குழப்பங்களின் தீங்கிலிருந்து (எங்களை) பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றோம்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் நான் கண்டேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த நபிமொழி, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைக் குறித்துக் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறை வசனத்தை ஓதும்போது நினைவுகூரப்படுவது வழக்கம்.28 அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، حدثنا هشام، عن قتادة، عن انس رضى الله عنه قال سالوا النبي صلى الله عليه وسلم حتى احفوه بالمسالة، فصعد النبي صلى الله عليه وسلم ذات يوم المنبر فقال " لا تسالوني عن شىء الا بينت لكم ". فجعلت انظر يمينا وشمالا، فاذا كل رجل راسه في ثوبه يبكي، فانشا رجل كان اذا لاحى يدعى الى غير ابيه فقال يا نبي الله من ابي فقال " ابوك حذافة ". ثم انشا عمر فقال رضينا بالله ربا، وبالاسلام دينا، وبمحمد رسولا، نعوذ بالله من سوء الفتن. فقال النبي صلى الله عليه وسلم " ما رايت في الخير والشر كاليوم قط، انه صورت لي الجنة والنار حتى رايتهما دون الحايط ". قال قتادة يذكر هذا الحديث عند هذه الاية {يا ايها الذين امنوا لا تسالوا عن اشياء ان تبد لكم تسوكم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7089
- Book Index
- 40
Grades
- -
