ஹதீஸ்கள்
#7059
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது. -அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (‘இந்த அளவுக்கு’ என்று கூறியபோது, தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.- அப்போது “நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம். தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள்.10 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا ابن عيينة، انه سمع الزهري، عن عروة، عن زينب بنت ام سلمة، عن ام حبيبة، عن زينب ابنة جحش رضى الله عنهن انها قالت استيقظ النبي صلى الله عليه وسلم من النوم محمرا وجهه يقول " لا اله الا الله، ويل للعرب من شر قد اقترب، فتح اليوم من ردم ياجوج وماجوج مثل هذه ". وعقد سفيان تسعين او ماية. قيل انهلك وفينا الصالحون قال " نعم، اذا كثر الخبث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7059
- Book Index
- 11
Grades
- -
