ஹதீஸ்கள்
#7052
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம், “எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்” என்று சொன்னார்கள். மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، حدثنا الاعمش، حدثنا زيد بن وهب، سمعت عبد الله، قال قال لنا رسول الله صلى الله عليه وسلم " انكم سترون بعدي اثرة وامورا تنكرونها". قالوا فما تامرنا يا رسول الله قال " ادوا اليهم حقهم وسلوا الله حقكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7052
- Book Index
- 5
Grades
- -
