ஹதீஸ்கள்
#7049
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது” என்று கூறுவான். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن مغيرة، عن ابي وايل، قال قال عبد الله قال النبي صلى الله عليه وسلم " انا فرطكم على الحوض، ليرفعن الى رجال منكم حتى اذا اهويت لاناولهم اختلجوا دوني فاقول اى رب اصحابي. يقول لا تدري ما احدثوا بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7049
- Book Index
- 2
Grades
- -
