ஹதீஸ்கள்
#7048
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகின்றவர் களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் சமுதாயத்தார்” என்பேன். அதற்கு “உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்த வழியே அப்படியே திரும்பிச் சென்றுவிட்டார் கள்” என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் (வந்த வழியே) எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள்.3 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا بشر بن السري، حدثنا نافع بن عمر، عن ابن ابي مليكة، قال قالت اسماء عن النبي صلى الله عليه وسلم قال " انا على، حوضي انتظر من يرد على، فيوخذ بناس من دوني فاقول امتي. فيقول لا تدري، مشوا على القهقرى ". قال ابن ابي مليكة اللهم انا نعوذ بك ان نرجع على اعقابنا او نفتن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7048
- Book Index
- 1
Grades
- -
