ஹதீஸ்கள்
#7035
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்கா நகரிலிருந்து புலம்பெயர்ந்து அங்கிருந்து பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி யமாமாகவோ அல்லது ஹஜராகவோ இருக்கும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால், (நான் கண்ட) அந்த நகரம் யஸ்ரிப் -மதீனா ஆகிவிட்டது. மேலும், அந்தக் கனவில் சில காளைமாடுகளைப் பார்த்தேன். (அவை அறுக்கப்பட்டன.) உஹுத் போர் நாளில் (கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த தகுதி (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் போரின்போது கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 அத்தியாயம் :
حدثني محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن جده ابي بردة، عن ابي موسى، اراه عن النبي صلى الله عليه وسلم قال " رايت في المنام اني اهاجر من مكة الى ارض بها نخل، فذهب وهلي الى انها اليمامة او هجر، فاذا هي المدينة يثرب، ورايت فيها بقرا والله خير، فاذا هم المومنون يوم احد، واذا الخير ما جاء الله من الخير وثواب الصدق الذي اتانا الله به بعد يوم بدر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7035
- Book Index
- 50
Grades
- -
