ஹதீஸ்கள்
#7034
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக என்னிடம் கூறப்பட்டது: நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் கைகளில் தங்கத்தாலான இரு காப்புகள் வைக்கப்பட்டன. நான் அவ்விரண்டையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதுடன் அவற்றை வெறுக்கவும் செய்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்துபோய்விட்டன. அவ்விரண்டும் (இனி வரவிருக்கும்) இரு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக அதற்கு விளக்கமும் கண்டேன். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட ‘(அஸ்வத்) அல்அன்சீ’ ஆவான்; மற்றொருவன் முசைலிமா ஆவான்.53 அத்தியாயம் :
فقال ابن عباس ذكر لي ان رسول الله صلى الله عليه وسلم قال " بينا انا نايم رايت انه وضع في يدى سواران من ذهب، ففظعتهما وكرهتهما، فاذن لي، فنفختهما فطارا، فاولتهما كذابين يخرجان ". فقال عبيد الله احدهما العنسي الذي قتله فيروز باليمن، والاخر مسيلمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7034
- Book Index
- 49
Grades
- -
