ஹதீஸ்கள்
#7032
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.52 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن حمزة بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينا انا نايم اتيت بقدح لبن فشربت منه، ثم اعطيت فضلي عمر بن الخطاب ". قالوا فما اولته يا رسول الله قال " العلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7032
- Book Index
- 47
Grades
- -
