ஹதீஸ்கள்
#7027
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) பால் கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்த அது (என் நகத்தின் ஊடே வெளியேறி) ஓடக் கண்டேன். பிறகு மீதியை உமருக்குக் கொடுத்தேன். (அப்போது) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.47 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، اخبرني حمزة بن عبد الله بن عمر، ان عبد الله بن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينا انا نايم اتيت بقدح لبن فشربت منه، حتى اني لارى الري يجري، ثم اعطيت فضله عمر ". قالوا فما اولته يا رسول الله قال " العلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7027
- Book Index
- 44
Grades
- -
