ஹதீஸ்கள்
#7025
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந் தோம். அப்போது அவர்கள், “நான் தூங்கிக்கொண்டிருந்த சமயம் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு அரண்மனையொன்றின் அருகில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். நான், (வானவர்களிடம்) “இந்த அரண்மனை யாருக்குரியது?” என்றேன். அதற்கு அவர்கள், “உமருக்குரியது” என்று சொன்னார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்துவிட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பண மாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்!” என்றார்கள். அத்தியாயம் :
حدثني يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة، قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم قال " بينا انا نايم رايتني في الجنة، فاذا امراة تتوضا الى جانب قصر، فقلت لمن هذا القصر فقالوا لعمر. فذكرت غيرته فوليت مدبرا ". فبكى عمر وقال عليك بابي انت وامي يا رسول الله اغار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7025
- Book Index
- 42
Grades
- -
