ஹதீஸ்கள்
#7024
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் (கனவில்) சொர்க்கத்திற்குள் நுழைந்து தங்கத்தாலான ஓர் அரண்மனையைக் கண்டேன். அப்போது நான், “இந்த அரண்மனை யாருக்குரியது?” என்று (வானவர்களிடம்) கேட்டேன். அதற்கு அவர்கள், “குறைஷியரிலுள்ள (உமர் பின் அல்கத்தாப் எனும்) ஒரு மனிதருக்குரியது” என்று பதிலளித்தார்கள். கத்தாபின் புதல்வரே! உமது ரோஷத்தைக் குறித்து நான் அறிந்துவைத்திருந்ததே அதற்குள் நுழைய விடாமல் என்னைத் தடுத்துவிட்டது” என்றார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.43 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا معتمر بن سليمان، حدثنا عبيد الله بن عمر، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " دخلت الجنة فاذا انا بقصر من ذهب، فقلت لمن هذا فقالوا لرجل من قريش. فما منعني ان ادخله يا ابن الخطاب الا ما اعلم من غيرتك ". قال وعليك اغار يا رسول الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7024
- Book Index
- 41
Grades
- -
