ஹதீஸ்கள்
#7023
ஸஹீஹ் அல்-புகாரீ - Interpretation of Dreams
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந் திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு ஓர் அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். நான், “இந்த அரண்மனை யாருக்குரியது?” என்று (வானவர்களிடம்) கேட்டேன். அவர்கள், “உமர் பின் அல்கத்தாபிற்குரியது” என்று பதிலளித்தனர். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க நினைத்தேன். ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, அதனுள் நுழையாமல் திரும்பி வந்துவிட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.42 அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، حدثني الليث، حدثني عقيل، عن ابن شهاب، قال اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة، قال بينا نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم قال " بينا انا نايم رايتني في الجنة، فاذا امراة تتوضا الى جانب قصر، قلت لمن هذا القصر قالوا لعمر بن الخطاب. فذكرت غيرته فوليت مدبرا ". قال ابو هريرة فبكى عمر بن الخطاب ثم قال اعليك بابي انت وامي يا رسول الله اغار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7023
- Book Index
- 40
Grades
- -
