ஹதீஸ்கள்
#6944
ஸஹீஹ் அல்-புகாரீ - (Statements made under) Coercion
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, “யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், “அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். “இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், “அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்” என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலை யைப்) பெற்றால் அந்தச் சொத்தை அவர் விற்றுவிடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- (Statements made under) Coercion
- Hadith Index
- #6944
- Book Index
- 5
Grades
- -