ஹதீஸ்கள்
#6938
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது இல்லத்தில் தொழுமிடம் அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமானோர் அங்கு குழுமிவிட்டனர்.) அப்போது ஒரு மனிதர், “மாலிக் பின் துக்ஷுன் எங்கே? (அவர் மட்டும் நபியவர்களைச் சந்திக்க வரவில்லையே!)” என்று கேட்டார். அதற்கு எங்களில் ஒருவர், “மாலிக் பின் துக்ஷுன் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை யும் நேசிக்காதவர் (அதனால்தான், அவர் நபியைக் காண இங்கு வரவில்லை)” என்று கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவர் அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் எந்த அடியார் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் (ஏகத்துவ) வாக்கியத்துடன் செல்கிறாரோ அவர்மீது இறைவன் நரகத்தை தடை செய்யாதிருப்பதில்லை” என்று சொன்னார்கள்.25 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، اخبرني محمود بن الربيع، قال سمعت عتبان بن مالك، يقول غدا على رسول الله صلى الله عليه وسلم فقال رجل اين مالك بن الدخشن فقال رجل منا ذلك منافق لا يحب الله ورسوله. فقال النبي صلى الله عليه وسلم " الا تقولوه يقول لا اله الا الله يبتغي. بذلك وجه الله ". قال بلى. قال " فانه لا يوافى عبد يوم القيامة به الا حرم الله عليه النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6938
- Book Index
- 20
Grades
- -
