ஹதீஸ்கள்
#6936
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகை யில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பிக்காத பல (வட்டார) மொழிவழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். உடனே தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை காத்திருந்தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு ‘அவரது மேல்துண்டை’ அல்லது ‘எனது மேல்துண்டைக்’ கழுத்தில் போட்டுப் பிடித்து, “இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்காண்பித்தது யார்?” என்று கேட்டேன். அவர் “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்” என்று பதிலளித்தார். “நீர் பொய் சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தி யாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக்காட்டினார்கள்” என்றேன். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துக்கொண்டு சென்று, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழிவழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு ‘அல்ஃபுர்கான்’ அத்தி யாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக் கொடுத்தீர்கள்” என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! இவரை விடுங்கள்” என்று கூறிவிட்டு, “ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக்காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள். பிறகு (என்னை நோக்கி) “உமரே! நீங்கள் ஓதுங்கள்” என்று சொன்னார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. நிச்சயமாக இந்த குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு அவற்றில் எது எளிதானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
قال ابو عبد الله وقال الليث حدثني يونس، عن ابن شهاب، اخبرني عروة بن الزبير، ان المسور بن مخرمة، وعبد الرحمن بن عبد القاري، اخبراه انهما، سمعا عمر بن الخطاب، يقول سمعت هشام بن حكيم، يقرا سورة الفرقان في حياة رسول الله صلى الله عليه وسلم فاستمعت لقراءته، فاذا هو يقروها على حروف كثيرة لم يقرينيها رسول الله صلى الله عليه وسلم كذلك، فكدت اساوره في الصلاة فانتظرته حتى سلم، ثم لببته بردايه او بردايي فقلت من اقراك هذه السورة قال اقرانيها رسول الله صلى الله عليه وسلم قلت له كذبت فوالله ان رسول الله صلى الله عليه وسلم اقراني هذه السورة التي سمعتك تقروها. فانطلقت اقوده الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله اني سمعت هذا يقرا بسورة الفرقان على حروف لم تقرينيها، وانت اقراتني سورة الفرقان. فقال رسول الله صلى الله عليه وسلم " ارسله يا عمر، اقرا يا هشام ". فقرا عليه القراءة التي سمعته يقروها. قال رسول الله صلى الله عليه وسلم " هكذا انزلت ". ثم قال رسول الله صلى الله عليه وسلم " اقرا يا عمر ". فقرات فقال " هكذا انزلت ". ثم قال " ان هذا القران انزل على سبعة احرف فاقرءوا ما تيسر منه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6936
- Book Index
- 18
Grades
- -
