ஹதீஸ்கள்
#6933
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியை) நபி (ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக்கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘அப்துல்லாஹ் பின் தில் குவைஸிரா’ என்பவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?” என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், “என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவரை விட்டுவிடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடைய தொழுகை யுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்தி óருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவருடைய ‘இரு கரங்களில்’ அல்லது ‘இரு மார்பகங்களில்’ ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்று’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று’ இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று சொன்னார்கள். நான் இந்த நபிமொழியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரவான் எனுமிடத்தில்) அலீ (ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ (ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் (அலீ (ரலி) அவர்கள் முன்னிலையில்) கொண்டுவரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின்படியே அவன் இருந்தான். அவன் தொடர்பாகவே, “(நபியே!) தானப் பொருட்கள் (விநியோகம்) தொடர்பாக உம்மைக் குறைகூறுவோரும் அவர்களில் உள்ளனர்” என்று தொடங்கும் வசனம் (9:58) அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.19 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن ابي سعيد، قال بينا النبي صلى الله عليه وسلم يقسم جاء عبد الله بن ذي الخويصرة التميمي فقال اعدل يا رسول الله. فقال " ويلك من يعدل اذا لم اعدل ". قال عمر بن الخطاب دعني اضرب عنقه. قال " دعه فان له اصحابا يحقر احدكم صلاته مع صلاته، وصيامه مع صيامه، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ينظر في قذذه فلا يوجد فيه شىء، ينظر في نصله فلا يوجد فيه شىء، ثم ينظر في رصافه فلا يوجد فيه شىء، ثم ينظر في نضيه فلا يوجد فيه شىء، قد سبق الفرث والدم، ايتهم رجل احدى يديه او قال ثدييه مثل ثدى المراة او قال مثل البضعة تدردر، يخرجون على حين فرقة من الناس ". قال ابو سعيد اشهد سمعت من النبي صلى الله عليه وسلم واشهد ان عليا قتلهم وانا معه، جيء بالرجل على النعت الذي نعته النبي صلى الله عليه وسلم. قال فنزلت فيه {ومنهم من يلمزك في الصدقات}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6933
- Book Index
- 15
Grades
- -
