ஹதீஸ்கள்
#6917
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) “இவரை முகத்தில் அறைந்தீரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் ‘மனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக’ என்று கூறக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மத் (ஸல்) அவர்களைவிடவுமா?’ என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒன்றைப் பிடித்தவாறு (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது ‘தூர்’ (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.62 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن عمرو بن يحيى المازني، عن ابيه، عن ابي سعيد الخدري، قال جاء رجل من اليهود الى النبي صلى الله عليه وسلم قد لطم وجهه فقال يا محمد ان رجلا من اصحابك من الانصار لطم في وجهي. قال " ادعوه ". فدعوه. قال " لم لطمت وجهه ". قال يا رسول الله اني مررت باليهود فسمعته يقول والذي اصطفى موسى على البشر. قال قلت وعلى محمد صلى الله عليه وسلم قال فاخذتني غضبة فلطمته. قال " لا تخيروني من بين الانبياء فان الناس يصعقون يوم القيامة فاكون اول من يفيق، فاذا انا بموسى اخذ بقايمة من قوايم العرش، فلا ادري افاق قبلي ام جزي بصعقة الطور
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6917
- Book Index
- 55
Grades
- -
