ஹதீஸ்கள்
#6910
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்திமீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்த சிசுவையும் கொன்றுவிட்டாள். ஆகவே, மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்கள்மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.50 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، حدثنا يونس، عن ابن شهاب، عن ابن المسيب، وابي، سلمة بن عبد الرحمن ان ابا هريرة رضى الله عنه قال اقتتلت امراتان من هذيل، فرمت احداهما الاخرى بحجر قتلتها وما في بطنها، فاختصموا الى النبي صلى الله عليه وسلم فقضى ان دية جنينها غرة عبد او وليدة، وقضى دية المراة على عاقلتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6910
- Book Index
- 48
Grades
- -
