ஹதீஸ்கள்
#6909
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணிப்) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால் இறந்து பிறந்தது. அது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (நஷ்ட ஈடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர், நஷ்ட ஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். ஆகவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) நஷ்டஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவளது சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.49 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن ابي هريرة،. ان رسول الله صلى الله عليه وسلم قضى في جنين امراة من بني لحيان بغرة عبد او امة. ثم ان المراة التي قضى عليها بالغرة توفيت، فقضى رسول الله صلى الله عليه وسلم ان ميراثها لبنيها وزوجها، وان العقل على عصبتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6909
- Book Index
- 47
Grades
- -
