ஹதீஸ்கள்
#6903
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அலீ (ரலி) அவர்களிடம் (நபி (ஸல் அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?” என்று கேட்டேன். -அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் “மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்துள்ளார்கள்.- அதற்கு அலீ (ரலி) அவர்கள், “வித்துக்களைப் பிளந்தவனும் உயிரி னங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர” என்று கூறினார்கள். நான், “இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதில் உள்ளன” என்றார்கள்.47 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، حدثنا مطرف، قال سمعت الشعبي، قال سمعت ابا جحيفة، قال سالت عليا رضى الله عنه هل عندكم شىء ما ليس في القران وقال مرة ما ليس عند الناس فقال والذي فلق الحب وبرا النسمة ما عندنا الا ما في القران، الا فهما يعطى رجل في كتابه، وما في الصحيفة. قلت وما في الصحيفة قال العقل، وفكاك الاسير، وان لا يقتل مسلم بكافر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6903
- Book Index
- 42
Grades
- -
