ஹதீஸ்கள்
#6891
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரரிடம்) “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆகவே, ஆமிர் (ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகவோட்டி யார்?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்துகொண்ட) மக்கள், “அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (அல்லாஹ்வின் தூதரே!)?” என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் (அடுத்த நாள்) காலையில் (தமது முழங்காலில் தமது வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன; அவர் (தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்” என்று பேசினர். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின” என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன என்று மக்கள் கருதுகின்றனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனைவிட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?” என்று கேட்டார்கள்.30 அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، حدثنا يزيد بن ابي عبيد، عن سلمة، قال خرجنا مع النبي صلى الله عليه وسلم الى خيبر فقال رجل منهم اسمعنا يا عامر من هنيهاتك. فحدا بهم، فقال النبي صلى الله عليه وسلم " من السايق " قالوا عامر. فقال " رحمه الله ". فقالوا يا رسول الله هلا امتعتنا به. فاصيب صبيحة ليلته فقال القوم حبط عمله، قتل نفسه. فلما رجعت وهم يتحدثون ان عامرا حبط عمله، فجيت الى النبي صلى الله عليه وسلم فقلت يا نبي الله فداك ابي وامي، زعموا ان عامرا حبط عمله. فقال " كذب من قالها، ان له لاجرين اثنين، انه لجاهد مجاهد، واى قتل يزيده عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6891
- Book Index
- 29
Grades
- -
