ஹதீஸ்கள்
#6881
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்துவிட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவேதான், அல்லாஹ் (தனது வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி, இறைநம்பிக்கை கொண்டோரே! கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம் போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட் டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாக பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் இறைவனிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் அருளும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் எல்லைமீறினால் அவருக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (2:178) என்று கூறுகின்றான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘மன்னிப்பு அளித்தல்’ (‘அஃப்வ்’) என்பது, வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்பதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.18 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، عن مجاهد، عن ابن عباس رضى الله عنهما قال كانت في بني اسراييل قصاص، ولم تكن فيهم الدية فقال الله لهذه الامة {كتب عليكم القصاص في القتلى} الى هذه الاية {فمن عفي له من اخيه شىء}. قال ابن عباس فالعفو ان يقبل الدية في العمد، قال {فاتباع بالمعروف} ان يطلب بمعروف ويودي باحسان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6881
- Book Index
- 20
Grades
- -
