ஹதீஸ்கள்
#6844
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தமது தலையை என் மடி மீது வைத்துக்கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களை யும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து)விட்டாயே!” எனக் கடிந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தமது கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தால்தான் நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய வசனத்தை அருளினான்.59 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، قالت جاء ابو بكر رضى الله عنه ورسول الله صلى الله عليه وسلم واضع راسه على فخذي فقال حبست رسول الله صلى الله عليه وسلم والناس، وليسوا على ماء. فعاتبني، وجعل يطعن بيده في خاصرتي، ولا يمنعني من التحرك الا مكان رسول الله صلى الله عليه وسلم فانزل الله اية التيمم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6844
- Book Index
- 66
Grades
- -
