ஹதீஸ்கள்
#6838
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகி யோர் கூறியதாவது: “ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்)?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள். மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்டையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா? அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா?” என்பது எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.52 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابي هريرة، وزيد بن خالد، رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم سيل عن الامة اذا زنت ولم تحصن قال " اذا زنت فاجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم ان زنت فاجلدوها، ثم بيعوها ولو بضفير ". قال ابن شهاب لا ادري بعد الثالثة او الرابعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6838
- Book Index
- 61
Grades
- -
