ஹதீஸ்கள்
#6824
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மாஇஸ் பின் மாலிக் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்று சொன்னார்கள். அவர், “(அவ்வாறெல்லாம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல், “அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد الجعفي، حدثنا وهب بن جرير، حدثنا ابي قال، سمعت يعلى بن حكيم، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال لما اتى ماعز بن مالك النبي صلى الله عليه وسلم قال له " لعلك قبلت او غمزت او نظرت ". قال لا يا رسول الله. قال " انكتها ". لا يكني. قال فعند ذلك امر برجمه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6824
- Book Index
- 52
Grades
- -
