ஹதீஸ்கள்
#6822
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் கரிந்துபோனேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “எதனால் அப்படி?” என்று கேட்டார்கள். அவர், “நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “தர்மம் செய்!” என்று சொன்னார்கள். அவர், “(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தமது கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது. -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டுவந்த உணவு என்ன என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.- அப்போது நபி (ஸல்) அவர்கள், “கரிந்துபோனவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “இதோ நான் இங்குதான் இருக்கிறேன்”. என்றார். நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொண்டுபோய் தர்மம் செய்!” என்றார்கள். அவர், “என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு” என்றார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: முந்தைய ஹதீஸ் இதைவிடத் தெளிவாக உள்ளது. (அதில்) “உம் வீட்டாருக்கே உண்ணக்கொடு” என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.39 அத்தியாயம் :
وقال الليث عن عمرو بن الحارث، عن عبد الرحمن بن القاسم، عن محمد بن جعفر بن الزبير، عن عباد بن عبد الله بن الزبير، عن عايشة، اتى رجل النبي صلى الله عليه وسلم في المسجد قال احترقت. قال " مم ذاك ". قال وقعت بامراتي في رمضان. قال له " تصدق ". قال ما عندي شىء. فجلس واتاه انسان يسوق حمارا ومعه طعام قال عبد الرحمن ما ادري ما هو الى النبي صلى الله عليه وسلم فقال " اين المحترق ". فقال ها انا ذا. قال " خذ هذا فتصدق به ". قال على احوج مني ما لاهلي طعام قال " فكلوه ". قال ابو عبد الله الحديث الاول ابين قوله " اطعم اهلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6822
- Book Index
- 50
Grades
- -
