ஹதீஸ்கள்
#6821
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு (இது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய) உன்னிடம் ஓர் அடிமை உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை (இயலாது)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்றார்கள்.38 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه ان رجلا، وقع بامراته في رمضان، فاستفتى رسول الله صلى الله عليه وسلم فقال " هل تجد رقبة ". قال لا. قال " هل تستطيع صيام شهرين ". قال لا. قال " فاطعم ستين مسكينا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6821
- Book Index
- 49
Grades
- -
