ஹதீஸ்கள்
#6820
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் (மாஇஸ் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் பேசுகிறேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமண மாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். எனவே, நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்மீது கற்கள் விழத் தொடங்கியதும் அவர் (வலி தாங்க முடியாமல்) தப்பியோட ஆரம்பித்தார். பிறகு, அவர் பிடிக்கப்பட்டு, இறக்கும்வரை அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்ல விதமாகப் பேசியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தாôர்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அறிவிப்பாளர்களான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோர் தம் அறிவிப்புகளில் “அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்” என்பதைக் கூறவில்லை. அபூஅப்தில்லாஹ் (புகாரியான என்) இடம், “நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?” என வினவப்பட்டது. “(ஆம்) அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். “மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?” என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன். அத்தியாயம் :
حدثني محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن جابر، ان رجلا، من اسلم جاء النبي صلى الله عليه وسلم فاعترف بالزنا فاعرض عنه النبي صلى الله عليه وسلم حتى شهد على نفسه اربع مرات. قال له النبي صلى الله عليه وسلم " ابك جنون ". قال لا. قال " احصنت ". قال نعم. فامر به فرجم بالمصلى، فلما اذلقته الحجارة فر، فادرك فرجم حتى مات، فقال النبي صلى الله عليه وسلم خيرا وصلى عليه. لم يقل يونس وابن جريج عن الزهري فصلى عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6820
- Book Index
- 48
Grades
- -
