ஹதீஸ்கள்
#6817
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சை செய்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்” என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) “சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள். (அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள், “விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்” என்பதையும் கூடுதல் தகவலாக எமக்கு அறிவித்தார்கள்.34 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا الليث، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها قالت اختصم سعد وابن زمعة فقال النبي صلى الله عليه وسلم " هو لك يا عبد بن زمعة، الولد للفراش، واحتجبي منه يا سودة ". زاد لنا قتيبة عن الليث " وللعاهر الحجر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6817
- Book Index
- 45
Grades
- -
