ஹதீஸ்கள்
#6814
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் பின் மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن ابن شهاب، قال حدثني ابو سلمة بن عبد الرحمن، عن جابر بن عبد الله الانصاري، ان رجلا، من اسلم اتى رسول الله صلى الله عليه وسلم فحدثه انه قد زنى، فشهد على نفسه اربع شهادات، فامر به رسول الله صلى الله عليه وسلم فرجم، وكان قد احصن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6814
- Book Index
- 43
Grades
- -
