ஹதீஸ்கள்
#6813
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், “(குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா; அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.30 அத்தியாயம் :
حدثني اسحاق، حدثنا خالد، عن الشيباني، سالت عبد الله بن ابي اوفى هل رجم رسول الله صلى الله عليه وسلم قال نعم. قلت قبل سورة النور ام بعد قال لا ادري
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6813
- Book Index
- 42
Grades
- -
