ஹதீஸ்கள்
#6785
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹிஜ்ஜா) மாதம்தான்” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (‘மக்கா’)தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாள்தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றை அல்லாஹ் புனித மாக்கியுள்ளான்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், “ஆம்” என்று நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்தனர். பிறகு, “‘உங்களுக்கு அழிவுதான்’ அல்லது ‘உங்களுக்குக் கேடுதான்’! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிட வேண்டாம்” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :
حدثني محمد بن عبد الله، حدثنا عاصم بن علي، حدثنا عاصم بن محمد، عن واقد بن محمد، سمعت ابي قال عبد الله، قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع " الا اى شهر تعلمونه اعظم حرمة ". قالوا الا شهرنا هذا. قال " الا اى بلد تعلمونه اعظم حرمة ". قالوا الا بلدنا هذا. قال " الا اى يوم تعلمونه اعظم حرمة ". قالوا الا يومنا هذا. قال " فان الله تبارك وتعالى قد حرم دماءكم واموالكم واعراضكم، الا بحقها، كحرمة يومكم هذا، في بلدكم هذا، في شهركم هذا، الا هل بلغت ". ثلاثا كل ذلك يجيبونه الا نعم قال " ويحكم او ويلكم لا ترجعن بعدي كفارا، يضرب بعضكم رقاب بعض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6785
- Book Index
- 14
Grades
- -
