ஹதீஸ்கள்
#6784
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், “அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிப்பதில்லை; திருடுவ தில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்” என்று கூறி, இது தொடர்பான (60:12ஆவது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள். மேலும், “இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையே னும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள்.9 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا ابن عيينة، عن الزهري، عن ابي ادريس الخولاني، عن عبادة بن الصامت رضى الله عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم في مجلس فقال " بايعوني على ان لا تشركوا بالله شييا ولا تسرقوا، ولا تزنوا ". وقرا هذه الاية كلها " فمن وفى منكم فاجره على الله ومن اصاب من ذلك شييا فعوقب به، فهو كفارته، ومن اصاب من ذلك شييا، فستره الله عليه، ان شاء غفر له، وان شاء عذبه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6784
- Book Index
- 13
Grades
- -
